இலக்கியத்தில் மலர்கள் - லோகமாதேவி

 இலைக்கியத்தில் மலர்கள்

அமர்வு-1

வளர் பருவங்கள்/மலர்களின் பருவநிலைப்பெயர்கள்

1.     அரும்பு - அரும்பும் (தோன்றும்) நிலை

2.     நனை - அரும்பு வெளியில் தெரியும் நிலை

தேன் நனைப்பு தோன்றும். இந்தத்தேன்நணைப்புதோன்றுவதை'நனையினால் தோன்றும் நறா' என்றார்விளம்பிநாகனார் 

3.     முகை - அரும்பு முத்தாகும் நிலை 

முல்லை முகை வாய் திறப்ப பல் வயின் - நற்69/5

4.  மொக்குள் - "முகை மொக்குள் உள்ளது நாற்றம்" - திருக்குறள்முகைமுகைமொக்குள் உள்ளது நாற்றம்போல்பேதை

நகைமொக்குள்உள்ளதொன்றுண்டு.குறள்1274 

5.     முகிழ் - மணத்துடன்முகிழ்த்தல்

6.     போது - மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை

போது அவிழ் புது மணற் கானல் புன்னை நுண் தாது,நற்றிணை 74

7.     மலர் - மலரும் பூ

8.     பூ - பூத்த மலர்

9.     வீ - உதிரும் பூ

10.  பொதும்பர் - பூக்கள் பலவாகக்குலுங்கும் நிலை

11.  பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப்பூக்கள்

12.  செம்மல் - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை

 மலர்களின் உறுப்புகள்

புல்லி

அல்லி

அதழ்

தாது

சூலகம்

தேன்/மலரமுது

பண்புகள்

நாற்றம்

மென்மை

குளிர்ச்சி

நிறங்கள்

ஓளி நாட்டம்

வகைப்பாடு

கோட்டுப்பூ

கொடிப்பூ

நிலப்பூ

புதர்ப்பூ

வடிவங்கள்/ அமைவு

 

குடை

பந்து

விரல்

பல்லி முட்டை

தனி மலர்கள்

மஞ்சரிகள்

 

***

இலக்கியத்தில் மலர்கள்- அமர்வு- 2

1.     திணைகளில் மலர்கள்

2.     மலர்கள் உவமையாக்கபட்ட இடங்கள்

 

திணைகள்

நான்கு திணைகளும் மலர்களை அடிப்படையாக கொண்டதே:

முல்லை குறிஞ்சி மருத்தின் பின் நெய்தல்

பாலை-சிதைவடைந்த சூழல்

ஒப்பீடு

·       நாட்டு வளத்தைக்கூறுதல்

·       பெண்கலின் கூந்தல், உடல் நறுமணம், மென்மை

·       பற்கள், முலைகள், கால்கள், கண்கள்,இதழ்கள்

·       புருவங்கள், தொப்பூழ், இடை,!    

·       கற்பின் குறியீடு                                                                                

·       பறவைகள்,   மீன் முள்   

·       தலைவனின் தோள்

 நவீன இலக்கியங்களில் மலர்களின் ஒப்பீடு

  ***

பண்டைய தமிழரின் தாவர அறிவியல் ஆழம் மிக அதிகம். தொல்காப்பியத்தில் துவங்கி சங்க இலக்கியம், சங்கம் மருவிய காலத்து இலக்கியம் பக்தி இலக்கியம் மற்றும் தற்கால இலக்கியத்திலும் இந்த ஆழம் வெளிப்படுகிறது

மக்களின் வாழ்வியல், அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், மெய்ப்பாட்டியல், மரபியல் என அனைத்திலும் தாவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன

பயன்பாட்டு நிலை, குறியீட்டு நிலை, நேரடியாகவும் மறைமுகமாகவும் அடைமொழிகளின் வழியாகவும் உவமைகளின் வழியாகவும்   சங்க இலக்கியம் மிக விரிவாக தாவரங்களை பேசுகிறது

அதிகம் குறிபிடபட்டுள்ளவை:

தாமரை அதன் இருவகைகள் வெண்டாமரை செந்தாமரை

 அல்லி தாழை-

தாழை- மிக அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளது- கைதை கைதகை கண்டல் முண்டகம் தெங்கு என்னும் பெயர்களில்

குல்லை- காட்டுதுளசி துழாய் துளவம் துளவு

காந்தள்

 

மலர்கள் குறித்த பொதுவான தகவல்கள்:

‘‘நாற்றமிலாத மலரின் அழகு இன்னா’’ என்கின்றது. இன்னா நாற்பது

ஒவ்வொரு நிலத்திற்குரிய மலர்களை அகப்பொருள் விளக்கம் கூறுகின்றது.

குறிஞ்சி நிலம்- வேங்கைப்பூ, காந்தள் பூ

முல்லைநிலம்-குல்லைப்பூ, முல்லைப்பூ, தோன்றிப்பூ, பிடவம்பூ

மருதநிலம் -தாமரை பூ, கழுநீர்ப்பூ, குவளைப்பூ

நெய்தல் நிலம்- நெய்தல்பூ, தாழம்பூ,முண்டகப்பூ, அடம்பம் பூ

பாலை நிலம்- குராம்பூ, மராம்பூ

 

வள்ளுவர் இரு மலர்களை மட்டும் குறிப்பிடுகிறார்

அனிச்சம் குவளை

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்

மாணிழை கண்ணொவ்வேம் என்று.

அனிச்சப்பூ கால் களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு

நல்ல படாஅப் பறை

"அனிச்சமும் அன்னத்தின் தூவியும்

                                                            மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம்.

"மோப்பக் குழையும் அனிச்சம் 

                                                முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து." 

 

தலைவனின் நாட்டு வளத்தைச் சொல்ல,

‘‘கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே’’

கரிய கொம்புகளையுடைய குறிஞ்சிப்பூ 

‘‘அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை

மேக்கு எழு பெருஞ்சினை இருந்த தோகை

பூக்கொய் மகளிரின் தோன்றும் நாடன்’’

-கொல்லன் அழிசி,  என்றும்,

 ‘‘. . . . . .        . . . . . முன்றில்

நனை முதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்’’-கோப்பெருஞ்சோழன்

என்றும் , நாட்டு வளத்தைக் கூறக் குறிஞ்சிப்பூ, வேங்கை மலர், புன்க மலர் ஆகியன பற்றிக்கரிய கொம்புடைய குறிஞ்சிப்பூ

கரிய அடியை உடைய வேங்கை மரப் பூ

புன்க மரத்தின் மலர்கள் உதிரிந்து பரந்த வெள்ளிய மணற்பரப்பு

என்று நிறம், வடிவம் சுட்டப்படுகின்றது.

‘‘. . . . . .         . . . .               மனை மரத்து

எல்லுறும் மௌவல் நாறும்

பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே’’

 

என்பதில் முல்லை மலர் மனம் வீசும் கரிய கூந்தலை உடையவள் என்கிறது.

‘‘நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல்’’

         -பனம்பாரனார்-

நரந்தம் பூவின் மணம் கமழ்கின்ற கரிய கூந்தல்.

‘‘கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை

நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ

ஐது தொடை மாண்ட கோதை போல

நறிய நல்லோள் மேனி’’-சிறைக்குடி ஆந்தையார்

காந்தள் மலர், முல்லை மலர், குவளை மலர் போல , நறுமணத்தை உடைய தலைவியின் உடல்

         ‘‘வேங்கையும் காந்தளும் நாறி

         ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே’’-மோசிகீரனார்-சபு

வேங்கை மலரினது மணத்தையும், காந்தள் மலரினது மணத்தையும் ஒருங்கே பெற்றவள். ஆம்பல் மலரைக் காட்டிலும் குளிர்ச்சியை உடையவள்.

         ‘‘ மா என மடலும் ஊர்ப் பூ எனக்

         குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப’’-பேரெயின் முறுவலார்-

மடல் ஊரும் போது எருக்கம் பூவை ஆடவர் சூடினர்.

‘‘ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன’’  குறுந்

 , ‘‘கருங்கால் வேங்கை வீ உகு துறுகல்’’  குறுந்

,‘‘குவளையொடு பொதிந்த குலிவி நாறு நறு நுதல்’’  குறுந்

 ‘‘வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில் குளவி மொய்த்த அழுகற் சில் நீர்’’  குறுந்

 

திணைகள்

தொல்காப்பியர் ஒவ்வொரு திணைக்கும் உரிய நிலத்தினைக் குறிப்பிடும்பொழுது,

மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே   ( அகத்திணையியல்  )

என்று நிலத்தை மலர்களின் பெயரால் சுட்டிச் செல்கிறார்

நான்கு திணைகளும் மலர்களை அடிப்படையாக கொண்டதே: முல்லை குறிஞ்சி மருத்தின் பின் நெய்தல்

பாலை-சிதைவடைந்த சூழல்

முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து

நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்து

பாலை என்பதோர் படிவம் கொள்ளும்

(சிலம்பு -காடு காண் )

பாலையும் மலரின் பெயரே

கடல் மட்டத்திலிருந்து வெகுஉயரத்தில் குறிஞ்சி# தேவகுலத்தார்

 குறிஞ்சி

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆர் அளவு இன்றே சாரல்

கரும் கோல் குறிஞ்சி பூ கொண்டு

பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே

 

குறிஞ்சி 12 ஆண்டுக்கு ஒரு முறை மலரும் மலைப்பூ

முல்லை:கொடிப்பூ

முல்லை நிலம் அதைக்காட்டிலும் குறைவான உயரத்தில் புல்வெளிகள் நிறைந்தது

முல்லை நிலத்தின் இசைக்கருவி புல்லாங்குழல்

முல்லைத்தீங்குழல்

முல்லை கற்பின் சின்னம்

’’முல்லை சான்ற கற்பினள்’’ முல்லையின் வெண்மை நிறம் தூய்மையை குறிக்கிறது

மருதம்:  மென்புலம் நிலப்பூ

நெய்தல்:  நீர்ப்பூ

தாழை, ஞாழல், புன்னை, காவி மலர்கள் இந்நிலத்துக்கு உரியவை

பாலை: வன்புலம்

நில எல்லைகளை கடந்தும் மலர்கள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன

நால்வகை மலர்களும் குறிஞ்சி நிலத்திலேயே இருந்ததும் குறிப்பிடப்பட்டிருக்கிறது

கபிலர் எல்லா வகையான மலர்களையும் குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிட்டிருக்கிறார் 

 

ஒப்பீடு

ஞாழல்-நெய்தல் தாவரம் மிக சிறிய மலர் ஐயவி அன்ன சிறுவீ ஞாழல்

ஆரல் மீனின் முட்டை போன்றிருக்கும் புலிநகம் போலிருக்கும் மஞ்சரியில் இருந்து விரைவில் விழுந்துவிடும் மகளிர் இதை அணிவர்

நறு முல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த

செறி முறை பாராட்டினாய்; மற்று எம் பல்லின்

பறி முறை பாராட்டினையோ ஐய? கலி

 

குளன் அணி தாமரைப் பாசு அரும்பு ஏய்க்கும்

இளமுலை பாராட்டினாய்; மற்று எம் மார்பில்

தளர்முலை பாராட்டினையோ ஐய?

 

மாசறக் கழீஇய யானை போலப்

பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகற்

பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்

நோய்தந் தனனே தோழி

பயலை ஆர்ந்தன குவளையங் கண்ணே.-குறு

 

அரக்கு ஆம்பல் நாறும் வாய் அம் மருங்கிற் கன்னோ

பரல் கானம் ஆற்றின கொல்லோ - அரக்கு ஆர்ந்த

பஞ்சி கொண்டு இடினும் பைய பைய என என்று 

அஞ்சி பின் வாங்கும் அடி

முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்

கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்

குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்

தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்

இனிதெனக் கணவ னுண்டலின்

நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே.

அஞ்செங் கழுநீர் அரும்பவிழ்த் தன்ன

செங்கயல் நெடுங்கட் செழுங்கடைப் பூசலும்

கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை சுருளத்

  திலகச் சிறுநுதல் அரும்பிய வியரும்

  செவ்வி பார்க்குழு செழுங்குடிச் செல்வரொடு

சிலம்பு-ஊர்காண்காதை    

 

விழாக்காலங்களில் பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்கின்றனர். புது ஆடை உடுத்தியும்,  நீர்முள்ளிச் செடியில் வெண்மையான காம்புகளையுடையப் பூக்களைப் பறித்து    தலை நிறையப் பூச்சூடியும் விழா நடக்கும் இடத்தினை அழகுப்படுத்துகிறார்கள். அகநானூற்றில்,

மீன் முள் அன்ன, வெண்கால் மா மலர்

                   பொய்தல் மகளிர் விழவு அணிக் கூட்டும்” (அகம்.26:2-3)

                 ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன

கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ

முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து

எருவின் நுண் தாது குடைவன ஆடி

இல் இறை பள்ளி தம் பிள்ளையொடு வதியும் 5

புன்கண் மாலையும் புலம்பும்

இன்று-கொல் தோழி அவர் சென்ற நாட்டே

 

ஆம்பல் பூவின் சாம்பிய இதழ் போன்ற

கூம்பிய சிறகையுடைய வீட்டில் வாழும் குருவி

முற்றத்தில் காயும் தானியங்களை வயிறார உண்டு, தெருவில் உள்ள

காய்ந்த சாணத்தின் நுண்ணிய துகளில் குடைந்து விளையாடி

வீட்டுக் கூரைச்சாய்ப்பில் தன் குஞ்சுகளுடன் தங்கும்

புல்லிய மாலைப் பொழுதும், தனிமையும்

இல்லையோ தோழி! அவர் சென்ற நாட்டில்!                                                                                           

ஒளிநாட்டம்

எழுதரு மதியங் கடற்கண் டாஅங்

கொழுகுவெள் ளருவி யோங்குமலை நாடன்

ஞாயி றனையன் தோழி

நெருஞ்சி யனையவென் பெரும்பணைத் தோளே.    

- மதுரை வேள்ஆதத்தனார்.                                     

 

சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல

என்னொடு திரியான் ஆயின் வென் வேல்

மாரி அம்பின் மழை தோல் சோழர்          

வில் ஈண்டு குறும்பின் வல்லத்து புற மிளை

ஆரியர் படையின் உடைக என்

நேர் இறை முன்கை வீங்கிய வளையேஅகம் 336

பாடியவர்: மோசி கீரனார்.

பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான்.

திணை: பாடாண்.

துறை: பாணாற்றுப்படை

 

வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ,

`உணர்வோர் யார், என் இடும்பை தீர்க்க``எனக்,

கிளக்கும், பாண! கேள், இனி நயத்தின்;

பாழ்ஊர் நெருஞ்சிப் பசலை வான்பூ

ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு,               

இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க்

கொண்பெருங்காலத்துக் கிழவன்

தண்தார் அகலம் நோக்கின், மலர்ந்தே.        

புறம்

 

வளர் பருவங்கள்

மலர்களின் பருவநிலைப்பெயர்கள்

1.     அரும்பு - அரும்பும் (தோன்றும்) நிலை

2.     நனை - அரும்பு வெளியில் தெரியும் நிலை

தேன் நனைப்பு தோன்றும். இந்தத்தேன் நணைப்புதோன்றுவதை 'நனையினால் தோன்றும் நறா' என்றார்விளம்பி நாகனார் 

3.     முகை - அரும்பு முத்தாகும் நிலை 

முல்லை முகை வாய் திறப்ப பல் வயின் - நற் 69/5

4.  மொக்குள் - "முகை மொக்குள் உள்ளது நாற்றம்" - திருக்குறள்முகைமுகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை

நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.குறள் 1274 

5.     முகிழ் - மணத்துடன் முகிழ்த்தல்

6.     போது - மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை

போது அவிழ் புது மணற் கானல் புன்னை நுண் தாது,நற்றிணை 74

7.     மலர் - மலரும் பூ

8.     பூ - பூத்த மலர்

9.     வீ - உதிரும் பூ

 

 குன்றியனார்

  நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும்

           தைஇத் தண்கயம் போல” (ஐங்.84:3-4)

என்ற ஐங்குறுநூற்று அடிகள், நறுமணம் மிக்க மலர்களை அணிந்து ஐந்து வகையில் அலங்காரம் செய்யத்தக்க கூந்தலையுடையவர்களும், 

 

  

ஐயவி அன்ன சிறு வீ ஞாழல்

செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்

துறை அணிந்தன்று அவர் ஊரே இறை இறந்து

இலங்கு வளை நெகிழ சாஅய்

புலம்பு அணிந்தன்று அவர் மணந்த தோளே

வெண்சிறு கடுகுபோன்ற சிறிய பூக்களைக்கொண்ட ஞாழல்

செம்மையான மருதமரத்தின் வாடி உதிர்ந்த மலரோடு பரவிக்கிடந்து

தலைவனின் ஊரின் நீர்த்துறையை அழகுசெய்கிறது; இறங்கும் தோள்களை விட்டு நீங்கி

ஒளிரும் தோள்வளைகள் கழலும்படி மெலிந்து

தனிமைத் துயரைப் பூண்டுநிற்கின்றன அவர் தழுவிய தோள்கள்.

10.  பொதும்பர் - பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை

11.  பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப்பூக்கள்

12.  செம்மல் - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை

கொல் கரை நறும் பொழில் குயில் குடைந்து உதிர்த்த

புதுப்பூஞ் செம்மல் சூடி, புடை நெறித்து,   

கதுப்பு விரித்தன்ன காழ் அக நுணங்கு அறல். 

பொருளுரை:  ஆற்றின் நீரினால் இடிக்கப்படும் கரையில் உள்ள நறுமணமுடைய சோலையில் உள்ள குயில்கள் தங்கள் அலகினால் குத்திக் கீழே உதிர்த்த புதிய வாடல் மலர்களைச் சூடிய, பக்கங்கள் சுருண்ட நிலமகளின் கூந்தல் விரிந்திருப்பது போல இருந்தது கருமையான நுண்ணிய மணல்.

 

உறுப்புகள்

புல்லி புல்லுதல் தழுவுதல் அணைத்தல் பசுமை மணமற்றவை 

Perianth/tepal அதழ்-

காம்பு-காம்பு என்பது  ஏந்தி நிற்கும் உறுப்பு. இது கால்போன்று ஊன்றி நிற்பதால் 'கால்' எனப்படும். "அனிச்சப் பூ கால் களையாள்"எனத் திருக்குறள் காட்டுகின்றது. இக்காம்பு  இனவேறுபாட்டிற்கு ஏற்ப, தாள், தண்டு எனவும் குறிப்பிடப்படும். "காம்பு வேய் மலர்த்தாள்" - எனும் சூடாமணி நிகண்டு.

அதழ்-பூங்கொடி அவரை பொய் அதழ்: அகம் 

புல்லி என்பது புற இதழ். புல்லுதல் - தழுவுதல், அணைத்தல். என்னை அணைத்து மூடி இருப்பது புல்லி. வெயில், மழைகளிலிருந்து என்னைப் பாதுகாக்கும் காப்பு உறுப்பு. இது மெருகில்லாமல் சுரசுரப்பாக இருக்கும். பெரும்பகுதி பசுமை நிறமானது. நிகண்டுகள் இதனை 'புல்லி புறவிதழ் எனப் புல்லியாகக் குறிக்கும்.

தாதும் அதழும்  தண்டும் தோடும்

ஏடும் பூவின் இதழ்ப் பெயர் என்ப.

அல்லி அகஇதழ்

புல்லி புற இதழ்

(பிங்கல நிகண்டு)

 

மணமலி பூவீ மலர்போ து அலராம்

துணர் மஞ்சரிகொத்துத் தொத்தோடு இணராம்

நலம்சேர் குலைதாறு வல்வரியாகும்

பலம்காய் கனியாம் பழம்

(உரிச்சொல் நிகண்டு)

(மலரானது பூ, வீ, போது. அலர் என்றும் பூங்கொத்தானது துணர், மஞ்சரி, தொத்து, இணர் என்றும் குலையானது தாறு, வல்லரி என்றும் பழமானது பலம், காய், கனி என்றும் பெயர் பெறும்.)

தாது- மகரந்தம்

இன்னா நாற்பதும்,

‘‘நாற்றமிலாத மலரின் அழகு இன்னா’’என்கின்றது.

ஒவ்வொரு நிலத்திற்குரிய மலர்களை அகப்பொருள் விளக்கம் கூறுகின்றது.

குறிஞ்சி நிலம்- வேங்கைப்பூ, காந்தள் பூ

முல்லைநிலம்-குல்லைப்பூ, முல்லைப்பூ, தோன்றிப்பூ, பிடவம்பூ

மருதநிலம் -தாமரை பூ, கழுநீர்ப்பூ, குவளைப்பூ

நெய்தல் நிலம்- நெய்தல்பூ, தாழம்பூ,முண்டகப்பூ, அடம்பம் பூ

பாலை நிலம்- குராம்பூ, மராம்பூ

‘‘பயிறு போல் இரை பைந் தாது’’  குறுந்.

தாதின் செய்த தண் பனிப் பாவை’’  குறுந்.

 

வடிக் கதிர் திரித்த வல் ஞாண்பெரு வலை

இடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார்,

நிறையப் பெய்த அம்பி, காழோர்

சிறை அருங் களிற்றின், பரதவர் ஒய்யும்

சிறு வீ ஞாழற் பெருங் கடற் சேர்ப்பனை,                                                                                                                  

'ஏதிலாளன்' என்ப; போது அவிழ்

புது மணற் கானல் புன்னை நுண் தாது,

சூலகம்-கன்னிகை-பொருட்ட்டெ கன்னிகை பூவினுள் கோட்டை-                                                                                                                    

தேன் தேறல், நறா கள் மட்டு  மது 

பண்புகள்

தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம் நீ -பரிபாடல்

நாற்றம் உரைக்கும் ம்லர் உண்மை-நான் -கடிகைநறிய மலர் பெரிதும் நாறாமை இன்னா- இன்னா நாறப்து

மென் முகை மென் பூ மேனி

துய் மென்மை- துய்ம் மலர் உதிர -குறு 

மென்மை-அனிச்சம்

மோப்பக்குழையும்

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம்

 

கருங்குரல் நொச்சி.கரு நனைக்காயா காய மலர் மேனி

குளிர்ச்சி பண்பு-

துஞ்ரசு தீயோ மெல் அஞ்சி ஓதி எனப் பன்மாண் அகட்டில் குவளை ஒற்றி நற்-370

குளிர் வாழைப்பூ கொப்பூழ் -பாஞ் சபதம் 

செம் களம் பட கொன்று அவுணர் தேய்த்த

செம் கோல் அம்பின் செம் கோட்டு யானை

கழல் தொடி சேஎய் குன்றம்

குருதி பூவின் குலை காந்தட்டே

திப்புத்தோளார்

போர்க்களம் சிவப்பாகும்படி கொன்று அசுரர்களை அழித்த

சிவந்த கோலையுடைய அம்பினையும், சிவந்த கொம்புகளையுடைய யானையையும்

காலில் வீரக்கழலையும் தோளில் தொடியையும் கொண்ட முருகனின் குன்றம்

குருதிநிறம் வாய்ந்த காந்தள் பூக்குலைகளையுடையது.

டுகிறது அந்தப் பாடல்.

 

ஒளித்தனமை-ஒண்பூ,ஒள் வீ,

வகைப்பாடு

கோட்டினும், கொடியினும்நீரினும்  நிலத்தினும் காட்டிய பூ சிலம்பு-

 

கோட்டு மலரும் நில மலரும் குளிர் நீர் மலரும் கொழுங்கொடியின்  பெரிய புராணம்

கோட்டுப்பூ கொடிப்பூ நீர்ப்பூவோடு புதற்பூ என்றிவை நால்வகைப்பூவே- பிங்கல நிகண்டு

வயலகம் நிறைய புதர்ப்பூ-புறம் 

வடிவங்கள்

குடைப்பூ-புல்லிதழ் கோங்கின் மெல்லிதல்குடைப்ப்ய்ய் நற்

பல்லி நெரித்த சினை போலும் நீளிரும் புன்னை பொரிப்பூ

வெண் கடம்பு பந்தணிந்தவே-சீவக சிந்தா 

காந்தள் முகை புரை விரல்-புறம் 

அமைவு

தனி பூக்களாகவோ  மஞ்சரிகளாகவோ அமைந்திருக்கும்

 கொத்து மஞ்சரி துணரிணர் தொடர்ச்சி மற்றிவயனைத்தும் மலர்க்கொத்தென்ப-பிங்கல நிகண்டு  

வால் இணர் மடல் தாழை பத்துப்பாட்டு

சிறு கரும் பிடவின் வெண்டலை குறும்புதல் கண்ணியின் மலரும் -அகம்

நறும் பூங்கோதை தொடுத்த நாட்சினை குறுங்காற் காஞ்சி-சுறு பாணாற்றுப்படை 

குறுங்காற் காஞ்சிக்கோதை மெல்லிணர்-அகம்

Inflorescence, synflorescence

கொத்து -ஒழுங்கற்றது 

தொத்து-தலைகீழாக தொங்குவது

துணர்-திண்ணென்று வெடித்து பூக்கும் தொகுதி

இணர்-ஒழுங்குடன் அமைந்தது

மஞ்சஜரி-மிகச் செறிவானது

தொடர்ச்சி-மேல்நோக்கியோ பக்கவாட்டிலோ பூப்பாது-திர்சஸ்

குலை-திகுப்புகொத்து -சின்ஃப்லொரெசென்செ

 

மலரும் காலங்கள்

phenology and reproductive success

காலையில் மலர்பவை

மாலையில் மலர்பவை

கார் கால பூக்கள் கம்பராமாயணம் 

செருந்தி,அதிரல் பெருந்தண் சண்பகம் குரீஇப்பூளை திலகம் தேங்கமிழ் பாதிரி 

வை ஆறும் முதுவேனிற் காலத்திலும்

தண்கயக்குழலை குறிஞ்சி வெட்சி கார்காலத்தில்மலர்பவை

நள்ளிருள் நாறி

 மதி நோக்கி அலர்வித்த ஆம்பல் வான் மலர்-கலித்தொகை

குண்டு நீர் ஆம்பலும் கூம்பின,இனியே வந்தன்று வாழியோ மாலை-குறு

வண்டு பட ததைந்த கொடி இணர் இடை இடுபு

பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்

கதுப்பின் தோன்றும் புது பூ கொன்றை

கானம் கார் என கூறினும்

யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே

வண்டுகள் மொய்ப்பதால் மலர்ந்த நீண்ட கொத்துக்கள் (தழைகளினிடையே) விட்டுவிட்டு,

பொன்னால் செய்யப்பட்ட தலைச்சுட்டி போன்ற அணிகள் அணிந்த பெண்களின்

கூந்தலைப்போல் தோன்றும் புதிய பூக்களையுடைய கொன்றை மரமுள்ள

(இந்த) நந்தவனம் (இது) கார்ப்பருவம் என்று தெரிவித்தாலும்

நான் ஏற்கமாட்டேன்; அவர் பொய் சொல்லமாட்டார்.

மாமிலாடன்

 

சமுதாயமும் பூக்களும்

பூக்கள்  நிறைந்திருக்கும் பொய்கையில் நீராடுதல்

நீரில் மலர்களை இட்டு நீராடுதல்

பகலில் அணிகள், மாலையில் மலர்கள்

மலர்ப்படுக்கை

மலர் தோரணவாயில்

 விளக்குகளில் மலரை சூடுவர்

புதிய வணிகம் துவங்கும் பொது மலர்களை வைத்து, பயன்படுத்தும் கருவிகளுக்கும் மலரணிவித்தல்

பூக்களின் வடிவில் பானை குடம் போர்க்கருவிகள் 

இசையும் இசைக்கருவிகளும் பூக்களின் பெயரால் இருந்தன: முலை யாழ், முல்லைப்பண் அல்லிக்கூத்து ஆம்பல் இசை 

மணமக்களை  வாழ்த்த நெல்லும் முல்லையும் துவினர்

 முதலிரவில் படுக்கையை முல்லை மலர்தூவி அலங்கரித்தனர் . தலைநாள் இரவு

பூத்தொடுத்தல் வகை

கண்ணி-ஆண்கள் தலையில் சூடும் மலர்

தலையிலிருந்து கன்னத்தில் படுமாறு அணிதல் கோதை :பெண்களுக்கு

சிகழிகை- கொண்டையில் சுற்றிக்கட்டபடுவது

இண்டை-ஆண் குடுமியில் சும்மாடு போல் சுற்றிக்கொள்வது

மகளிரும் குழந்தைகளும் நெற்றிசுட்டிபோல அணிவது: சூட்டு

நீண்ட நாரில் தளர்வாக கட்டப்பட்டது:  மார்பில் சூடும் மாலை 

 தார். உருளைபோல  அடர்த்தியாக கட்டப்பட்டு மார்பில் திகழ்வது,பொதுவாக அரசனுக்குரியது, தாரின்றி மன்னன் சிம்மாசனத்தில் அமரமாட்டான்,மன்னின் முரசுக்கும் யானைக்கும் புரவிக்கும் தார் அணிவிக்கபப்டும்

புணர்ச்சிக்குரியதும் தாரே, புணர்ச்சியில் தார் குழைவதே இன்பமெனெப்பட்டது

தொங்கல் முனைகள் இணைக்கpபடாத மாலைகளும் அரசுன்னுக்குரியதே( ஆண்டாள் மாலை)

 துக்க காலத்தில் முல்லை அணிவதில்லை

கட்டப்படுவது கட்டுப்பூ, விடுபூக்கள் செருகுவதற்கு,மாறுபட்ட நிறம் கொண்டவை எதிர்பூக்கள் கோர்க்க வசதியாக உள்துளை கொண்டவை-உளைப்பூக்கள்

காம்புகளை நீக்கியும் நீக்காமலும், முழுமலராகவோ தனி இதழ்களாகவோ கட்டப்பட்டன

மலர் மொட்டுகள் விரிந்த மலர்கள் கலந்தும் தனித்தனியேவும் கட்டப்பட்டன

மகளிர் அறிந்த பல கலைகளில் மலர்தொடுத்தல் மணிமேகலையும் இக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தாள் ஆண்களும் தொடுத்தனர் 

அகவாழ்வில் பருவம் அடையும் போது முல்லைக்கொடியை வாசலில் நடுவாள்: இதிலிருந்தே பூப்பு எனும் சொல் வந்தது

முல்லை பூப்பது பெண் கன்னித்தன்மை அடைந்ததன் அறிவிப்பு

ஒரு காளை தான் அணிந்திருந்த முல்லையை கன்னிக்கு சூடினால் அவள் அவனுக்கு உரியவளாகிவிட்டாள் என்று பொருள்

ஆணையும் பெண்ணையும் பிணைக்கும் வாழ்வியல் சின்னமாகவும்   முல்லை இருந்தது

முல்லை என்பதே கற்புக்கு இணையாக சொல்லப்பட்டது  

விட்டுமுற்றத்தில்   மாதவிக்கொடி படரும்

முற்றத்தில் முல்லைக்கொடி

பூங்காக்ள்பொதுமக்களுக்கும்  அரசர்களுக்கும் உருவாக்காப்ட்டன. அரண்மணைபூங்காக்கள்  பும்பொழில் எனப்பட்டன

சுந்தரபாண்டியன் பூங்காவில் உணவருந்தியது குறிபிடபட்டிருக்கிறது 

தாமரை அரவிந்தம்  போது போதும் கமலம் பத்மம் செந்தாமரை  மற்றும் வெண்டாமரை  என்று இரண்டே வகை என்று எந்த குழப்பமும் இன்றி குறிப்பிடுகிறது

அலரி என்பது அல்லியல்ல மலரும் எல்லா மலருமே அலரி

தேவகன்னேரு என்னும் மலருக்கும் அலரி என்னும் பெயர் உண்டு

புற நானூற்றில் நூற்றிதலழ் அலரிஎன்று குறிப்பிடபட்டிருக்கிறது

 

பெயர்களில் மலர்கள்

புலவர்களின் பெயர்கள்-முள்ளியார்

மதுரை அளக்கர் ஞாழலார்

குமிழி  ஞாழலார் நப்பசலையார்

முகண்டை என்னும் பெயரில் ஒரு குறுநில மன்னன் இருந்தான்

களவு வாழ்வில் மலர்

புல்லினத்து ஆயர்மகன்சூடி வந்ததோர்

முல்லை ஒருகாழும் கண்ணியும் மெல்லியால்

கூந்தலுள் பெய்து முடித்தேன்மன் தோழியாய்

வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே

அன்னையும் அத்தனும் இல்லரா யாய்நாண

அன்னைமுன் வீழ்ந்தன்று அப்பூ

அதனை வினவலும் செய்யாள் சினவலும் செய்யாள்

நெருப்புக்கை தொட்டவர் போல விதிர்த்திட்டு

நீங்கிப் புறங்கடைப் போயினாள்  ( கலி 115 4-12)

 

இரண்டறி கள்வி நங் காதலோளே

முரண்கொள் துப்பிற் செல்வேல் மலையன்

முள்ளூா்க் கானம் நாற வந்து

நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள்

கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச்

சாந்துளா் நறுங்கதுப் பெண்ணெய் நீவி

தமரோ ரன்னள் வைகறை யானே  ( குறுந் – 312 )

 

அம்பல் மூதூா் அலா்வாய்ப் பெண்டிர்

இன்னா இன்னுரை கேட்ட சின்னாள்

அறியேன் போல உயிரேன்

நறிய நாறும்நின் கதுப்பென் றேனே      ( நற் – 143 )

முல்லைக்கலித் தலைவன் ஏற்றினை அடக்கும்போது காளை அவன் தலையில் சூடிய முல்லை மாலையினைத் தன் கொம்பினால் சுழற்றியது. அப்பூ, தலைவியின் கூந்தல்மீது சென்று வீழ்ந்தது. தலைவி அதனை விருப்பத்துடன் சூடிக் கொள்கிறாள். ஆனால் அதன்பின் தாயை எப்படிக் காண்பேன் என்று வருந்துகிறாள்.

பெய்போ தறியாத்தன் கூழையுள் ஏதிலான்

கைபுனை கண்ணி முடித்தாளென்று யாய் கேட்பின்

செய்வதி லாகுமோ மற்று   ( கலி – 107 )

இப்பாடல் அடிகளில் பெய்போதறியாத்தன் கூழை என்பதால் மலர் சூடுவதை அறியாத கூந்தல் என்பதனை அறிய முடிகிறது.

மடலேறும் தலைவன் எருக்க மாலை, ஆவிரம் பூ மாலை முதலியவற்றை அணிந்து வருதல் வழக்கமென்று உ.வே.சா. அவர்கள் குறிப்பிடுவார்.

மாவென மடலும் ஊர்ப பூவெனக்

குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப

மறுகின் ஆர்க்கவும் படுப

பிறிதும் ஆகுப காமங்காழ் கொளினே ( குறுந் – 17 )

 

வழிபாட்டில் மலர்கள் 

பெண்கள் வழிபாட்டின் போது மலர்களைப் பயன்படுத்தியமையை, 

நெல்லும் மலரும் தூஉய் கைதொழுது                                மல்லல் ஆவணம் மாலை அயர ( நெடு – 45 )

திருமண வாழ்த்து

திருமணத்தில் மலர்கள்

 திருமணத்தின் போது மணமக்களை நெல்லும் மலரும் தூவி வாழ்த்தியுள்ளனர்.

கற்பினின் வாழாஅ நற்பல வுதவிப்

பெற்றோற் பெட்கும் பிணையை ஆகென

நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி

பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க

வதுவை நன்மணம் ( அகம் – 86   

 திருமணம் முடிந்த பின்னர் தலைவியின் கூந்தலில் மலர் முடிக்கும் உரிமையைத் தலைவன் பெறுகிறான்.

எரிமருள் வேங்கை யிருந்த தோகை                                        இழையணி மடந்தையிற் றோன்று நாட                                           இனிது செய் தனையால் நுந்தை வாழியர்                              நன்மனை வதுவை ய்யரவிவள்                                           பின்னிருங் கூந்தல் மலரணிந்தோயே   ( ஐங்  -293 )

தலைவனுடன் இணைந்து இன்பமாக இருக்கும் நிலையில் தலைவி தன்னுடைய கூந்தலைப் பல வகையான மலர்களைச் சூடி அழகு படுத்துகிறாள்.

 பாரைப் பாதிரிக் குறுமயிர் மாமலர்

 நறு மோரோமொடு உடனெறிந்து அடைச்சிய

செப்பு இடந் தன்ன நாற்றந் தொக்குடன்

அணிநிறங் கொண்ட மணிமருளைம்பால் ( நற் 337:  4-7 )

 என்ற அடிகள் தலைவி பலவகையான மலர்களைக் கொண்டு தன் கூந்தலைப் பராமரித்தமையை விளக்குகின்றன. மலர் சூட்டும் உரிமையும் தலைவனுக்கு மட்டுமே வழங்கப் பட்டுள்ளது.

தாதுசூழ் கூந்தல் தனைபெறத் தைஇய

கோதை புனைகோ நினக்கு என்றான் ( கலி111: 12-13 )

என்ற அடிகள் இதனை விளக்கி நிற்கின்றன.

தலைவனைப் பிரிந்திருக்கையில் மலர்சூடாதிருத்தல்:

         தலைவனுடன் இணைந்திருக்கும் நிலையில் தன்னுடைய கூந்தலைப் பராமரிக்கும் தலைவி தலைவன் போரின் போதோ பொருள் ஈட்டுதல் பொருட்டோ பிரியும் நிலையில் கூந்தலைப் பராமரிப்பது இல்லை.

மையீரோதி மாணலந் தொலைவே ( நற் 57   10 )

 போதில் வறுங் கூந்தற் கொள்வதை நினையாம் ( கலி: 80  23 )

என்ற பாடல் அடிகள் இதனை விளக்கி நிற்கின்றன

புறத்திணை

மன்னர்க்குரிய அடையாளப் பூ

அரசர்களின் சின்னங்கள்: சோழன் ஆத்தி

பாண்டியன்: வேம்பு,பாண்டியன் நெடுஞ்செழியன் வேம்பன் என்றே அழைக்கப்பட்டான்

சேரன்: பொந்தை என்கிற  பனம் பூ 

பரிசுபொருட்கள்:தாமரை வடிவில் பொன் நாரால் கட்டப்பட்டவை

பட்டங்கள் பூக்களின் பெயரால்- வாகை எட்டி பட்டங்கள்

போர் சின்னமாகவும் பூக்களே

போர்வீரர்கள் பூக்கலாஈ சூடினர்-பூக்கோள் நிலை

வெற்றிக்கு  வாகை: துர்கைக்குரியது  

ஆநிரை கவர்தல்: வெட்சிபூ

கரந்தவற்றை  மீட்க: கரந்தைபூ

படையெடுக்க: வஞ்சிபூ

கோட்டை முற்றுகை: உழிஞை

முற்றுகை முறியடிப்பு: நொச்சி

களத்தில் கைகலப்பில்: தும்பை

போரின் போது போர் சின்னமும் அரசனின் சின்னமும் இரண்டும் அணிதல் வழக்கம்

போரில்லாதபோதும்ஆண் பெண் இருவரும் மலர்மாலைகள் அணிதல் வழக்கம்

பார்ப்பனர் உட்படஎல்லா மக்களும்,எல்லா வயதிலும் நெய்தல் ஆம்பல் குவளை என பலவகை மலர்களை அணிந்தனர்,

தொல்காப்பியர் மன்னர்க்குரிய அடையாளங்களைக் குறிப்பிடும்போது.

படையுங் கொடியுங் குடையும் முரசும்

நடைநவில் புரவியும் களிறும் தேரும்

தாரும் முடியும் நேர்வன பிறவும்

தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய  (மரபியல் – 72)

 என்று குறிப்பிடுவார். தார் என்பது மன்னர்களுடைய அடையாள மாலையைக் குறிக்கும். தமிழகத்தை ஆண்ட சேர சோழ பாண்டிய மன்னர்கள் தத்தமக்கு எனஅடையாள மாலையைக் கொண்டிருந்ததற்கான சான்றுகளைக் காணமுடிகிறது.

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்        கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்

நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே   நின்னொடு

பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந்தன்றே    ( புறம் 45 1-4 )

என்ற அடிகள் வேந்தர்கள் அடையாளப்பூச் சூட்டியமையை விளக்குகின்றன.  

போருக்குச் செல்லும் முன் போர்ப்பூ வழங்கல்

சங்க காலத்தில் போருக்குச் செல்லும் வீரர்கள் தமக்குரிய பூவைச் சூடிக் கொண்டு செல்வது மரபாக இருந்துள்ளது. அப்பூவினைப் பெற்றுக் கொள்ள வருமாறு தண்ணுமையை முழக்கியுள்ளனா்.

நிற்படைக்கு ஒல்கா யானை மேலோன்

குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை  ( புறம் 293  1-2 )                          

கேட்டியோ வாழி – பாண! பாசறைப்

பூக்கோள் இன்று என்று அறையும்

மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே ( புறம் 289  8-10 )

 என்ற அடிகள் பறை அறைந்து போர்ப்பூ பெற்றுக் கொள்ளுமாறு ஒலிப்பதனைக் குறிப்பிடுகின்றன.

போரின்போது பூச்சூட்டல்

 தொல்காப்பியர் புறத்திணைகளை ஏழாகக் குறிப்பிடுவார். அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் ஆகியவையாகும். ஆநிரைகளைக் கவரச் செல்லும் வீரர்கள் வெட்சிப்பூவினையே சூடுவர். வெற்றி பெறும் மன்னன் மட்டுமே வாகைப் பூவினைச் சூட இயலும். இவ்வாறு புறவாழ்விலும் மலர் இன்றியமையாத இடம் வகிப்பதை அறிந்து கொள்ள இயலுகிறது.

பொற்றாமரை மலர்ப் பரிசு

கலைஞர்களுக்குச் சிறப்புச் செய்யும்போது, பொன்னாலாகிய தாமரை மலர்களைப் பரிசளித்துச் சிறப்பிப்பர். சங்க காலத்தில் தமிழ்ப் புலவர்களையும் கலையில் சிறந்தவர்களையும் சிறப்பிப்பதற்குப் பொன்னாலாகிய தாமரைப் பூக்களைப் புரவலர்கள் வழங்கியுள்ளமை நோக்கத்தக்கது. பொன்னால் தாமரை வடிவில் மலர்களைச் செய்து அவற்றை வெள்ளிநாரால் தொடுத்துப்பொன்னரி மாலைஎன்ற பெயருடன் அதனைக் கலைஞர்களுக்கு கரிகாற்சோழன் வழங்கியதை,

‘‘எரியகைந் தன்ன வேடில் தாமரை

 சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி

 நூலின் வலவா நுணங்கரின் மாலை

 வாலொளி முத்தமொடு பாடினி யணிய‘‘

(பொருநர்., 159-162-வது வரிகள்)

எனப் பொருநராற்றுப்படை நவில்கிறது. இதனை,

‘‘ஒள்ளழல் புரிந்த தாமரை

 வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே“ (புறம், பாடல், 11)

அழல் புரிந்த வடர்தாமரை

 ஐதடர்ந்த நூற்பெய்து

 புனைவினைப் பொலிந்த பொலிநறுந் தெரியல்

 பாறுமயி ரிருந்தலை பொலியச் சூடிப்

 பாண்முற் றுகநின் நாண்மகி ழிருக்கை“ (புறம்., பாடல், 29)

என்று புறநானூறு எடுத்துரைக்கிறது.

 

இறைவழிபாட்டில் மலர்கள்

மலர்மிசை ஏகினான்: குறள்

கொன்றையணிந்தவன்

மலரவன்,’கடம்பன்

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு பூ இருக்கிறது

சிவனுக்கு கொன்றை

முருகனுக்கு கடம்பை

திருமகளுக்கு ஆம்பல்

புத்தனுக்கு தாமரை

அருகனுக்கு பிண்டி

திருமாலுக்கு வகுளம்

உமைக்கு குவளை

காளிக்கு செவ்வலரி

இந்திரனுக்கு மந்தாரம்

பூஜை என்பதே பூசெய்கை என்பதிலிருந்து வந்த சொல்

தெய்வத்துக்கு பயன்படுத்திய பூவை மற்றவர் பயன்படுத்த கூடாது என்னும் பொது விதி இருந்தது

தெய்வத்துக்கான மலர் தூயதாக இருக்க வேண்டு.ம்

எறிபத்தர் அடியார் வாய்காற்று பட்டால் தூய்மை கெட்டுவிடுமென்று வாயை துணியால் மூடிக்கொண்டு மலர்பறித்தார்

 வழிபாட்டில் மட்டுமல்லாது சமயக்கோட்பாடுகளிலும் மலர்கள் இடம்பெற்றிருந்தன

திருஞானசம்பந்தர் பூக்களால் ஆன்மவியலின் முழு பலனையும் பெறலாம் என்கிறார்

சுந்தர- பூமாலையின் வலையில் சிவனை சிக்க வைக்கலாம் என்றார்

அப்பர் சிவனை பூவாகவே, அதன் நிறமும் மணமுமாகவே சுட்டுகிறார்

நம்மாழ்வார் பூக்கள் வீடுபேறுக்கானவை என்கிறார்

சமணர்கள் அருகனை பூவன் என்றே போற்றினார்கள்

இண்டி பூவை படைபதை  பூப்பலி என்றார்கள்

புட்பவிதி என்னும் நூல் 1972ல் ஞான[பிரகாச பட்டரால் இயற்றப்பட்டது

பிரசாதமாக மலர்கள் அளிக்கப்பட்டன

 

சிவனும் தும்பையும்

அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் மூவருமே தும்பையையும் சிவனையும் குறித்து பாடியிருக்கிறார்கள். கோவிலொன்றுக்கு 1நாழி தும்பைப்பூ தினமும் வழங்கப்பட்டதை ஒரு கல்வெட்டு கூறுகிறது 

ஒரு கைப்பிடி தும்பை வழங்கப்பட்டதை மற்றொரு கல்வெட்டு கூறுகிறது.

தாமரை

இறைவழிபாட்டில்மற்றொரு முக்கிய மலர் தாமரை தாமரை பயிரிட தனியே நிலம் அளிக்கப்பட்டது

தாமரையை பறித்து கோவிலுக்கு கொடுப்பது தனி தொழிலாகவே இருந்தது.

அல்லியும் இதுபோலவே இறைவழிபாட்டிற்குரியதாக இருந்தது 

மல்லிகை

கற்பின் குறியீடு

முல்லை சான்ற கற்பின் மெல்லியல் ( சிறுபாண் -30 )

 முல்லை சான்ற கற்பின் மெல்லியல் குறுமகள் ( நற் 142   11-12 )  

மல்லிகை-பரிபாடல் தவிர வேறெங்கும் மல்லிகை  குறிப்பிடபடவில்லை

சிலப்பதிகாரத்தில் 3 இடங்களில் மல்லிகை

வெண்மை நிறமுள்ளவைகளுக்கு பின்னொட்டாக  மல்லிகை வருகிறது: அந்திமல்லிகை, மரமல்லிகை,பவள் மல்லிகை,மோசி மல்லிகை-அதிரல்

ஒக்கூர் மாசாத்தியாரின் முல்லைப் பாடல், இயற்கைப் பின்புலத்தில் பெண் மனதின் நுட்பங்களைப் பதிவாக்கியுள்ளது.

இளமை பாரார் வளம் நசைஇச் சென்றோர்

இவணும் வாரார் எவணரோ என

பெயல் புறந்தந்த பூங்கொடி முல்லைத்

தொகுமுகை இலங்கு எயிறுஆக

நகுமே தோழி நறுந்தண் காரே     (குறுந்தொகை.126)

இன்பமளிக்கும் கொண்டாட்டத்தினைக் கருதாமல் பொருள் தேடிப் பிரிந்து சென்றவர் எங்கு சென்றாரோ? இன்னும் அவர் இங்கு வரவில்லை. குளிர்ச்சியான கார்காலத்தில் மழை பொழிகிறது. முல்லைப் பூங் கொடியில் ஒளிர்கின்ற முல்லை அரும்புகள், அக் கொடியின் பற்களாக என்னைக் கண்டு நகைக்கின்றன. என்ன செய்வேன் தோழி எனத் தலைவி புலம்புகிறாள்.

முல்லைப் பூக்கள் பூக்கின்ற இயற்கையான நிகழ்வைக் கூடத் தன் நிலையைப் பார்த்து அவை சிரிப்பதாகக் கற்பிதம் செய்கிறாள்.  

முல்லையின் வகைகள்

தவளம் – வெண்ணிறமுல்லை – Jasminum auriculatum

செம்மல் – சாதிமுல்லை – Jasminum officinale

தளவம்செம்முல்லை – Jasminum grandiflorum

கொகுடிகாட்டுமுல்லை – Jasminum sambac

ஊசிமுல்லை – Jasminum caspidabium

கொடிமுல்லை – Jasminum sambac var.heyneanum

மயிலை – Jasminum sambac var.florae manoraepleno

வாகைத்திணையில் முல்லைப்பெயர் பெற்ற துறைகள் பன்னிரண்டாவன

அரசமுல்லை – அரசனது வெற்றி மேம்பாடு கூறுவது

பார்ப்பனமுல்லை – பார்ப்பனரது நடுவு நிலைச் சிறப்பைக் கூறுவது

கணியன்முல்லை – கணித்துக் கூறும் சோதிடன் புகழ் கூறுவது

மூதின்முல்லை – பழங் குடி வீரத்தாயின் மன வலிமை

அவையமுல்லை – நடுவு நிலைப் பெருமையைக் குறிப்பது

ஏறாண்முல்லை – ஏறுபோன்றவனால் பெற்ற குடிப் பெருமை கூறுவது.

வல்லாண்முல்லை –  ஊர், குடி கூறி வீரனது நல்லாண்மை குறிப்பது

காவல்முல்லை – அரசனது காவற் சிறப்பைக் குறிப்பது

பேராண்முல்லை – அரசன் போர்க்களத்தில் காட்டிய பேராண்மையைக் குறிப்பது

மறமுல்லை – படைவீரனது போர்த்துடிப்பைக் கூறுவது

குடைமுல்லை – மன்னனது கொற்றக்குடையின் சிறப்புக கூறுவது

சால்புமுல்லை – அறிவிற் சிறந்த சான்றோரது சிறப்புப் பற்றியது

காலத்தைக் குறிக்கும் முல்லைக் கார்முல்லை. கார் காலத்தையும், மாலைப்பொழுதை யும் குறிப்பது முல்லை மலர்.

கார் நயந்து எய்தும் முல்லை' என்பது ஐங்குறுநூறு பாடலின் வரி.

கார் என்பது மழையைக் குறிக்கும். மழைக்காலத்தில் மாலையில் மலர்ந்து நறுமணத்தைக்கொடுக்கும் மலர் முல்லை. முற்காலத்தில் வழிபாட்டிற்கும், வாழ்த்துவதற்கும் பயன்படுத்தப்பட்டது.

'நறு வீ முல்லை அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது' இது, முல்லைப்பாட்டின் வரி. தமிழர் வாழ்வில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளுக்கு மங்கல மலராகப் பயன்படுத்தப்பட்டது முல்லை. பெண் வாழ்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றி குடும்பம் நடத்துவதை முல்லை மலரோடு ஒப்பிட்டுப் பாடியுள்ளனர்.

'முல்லை சான்ற கற்பின் மெல்லியல்' (அகநானூறு 274) நறு மணமுடைய முல்லை மலர் அணிந்த தலைவி என்று குறிப்பிகுறிஞ்சி

ஓதலாந்தையார்

Comments

Popular posts from this blog

தமிழ் வரலாற்று புதிர்கள் - ராஜமாணிக்கம்

ஆனந்த் குமார் கவிதைகள் - நிக்கிதா