Posts

Showing posts from 2022

ஆனந்த் குமார் கவிதைகள் - நிக்கிதா

  மலைமேல் பறக்கும் வீடு   அம்மாவின் தலைவலி மருந்தை இந்த மதியத்தில் யாரோ திறந்துவிட்டார்கள் வெக்கையின் காதில் கேட்கிறது யூக்காலிப்டஸ் மந்திரம் வியர்த்துக்கிடக்கும் முதுகில் குளிரேற்றுகிறது வெறுந்தரை ஒரு சிறிய காற்றுக்கு மலைமேலென உயர்ந்துவிட்டது என் வீடு   …………………..   ராணி   நான் ஒரு எளிய உயிர் ஒரு அடிதான் முன்னால் வைப்பேன்   ஒரு யானை எதிரில் வந்தாலும்கூட பின்னால் ஓடமுடியாது   என்னால்   ஒரு அடி முன்னால் வைக்க என்னைப்போல் ஒரு எளியவனை நான் கொள்ள வேண்டும் அப்படியும் ஒரு அடி முன்னே வைப்பேன்   உனக்கோ நீ திரும்பும் திசையே உனது வழி அதில் யாரும் நிற்பதும் கூட இல்லை   உனது திட்டங்களோ எனது ' ஒன்றிக்கொன்று ' புத்திக்கு புரிவதேயில்லை இருந்தும் உன்னை நோக்கி ஒரு அடி முன்னே வைப்பேன்   எங்கிருந்தோ ' ட ' வெனப்பாயும் உனது குதிரையின் குழம்படியில் ஒருவன் சதைந்து போகிறான் அதன் அ...

தமிழ் வரலாற்று புதிர்கள் - ராஜமாணிக்கம்

Image
புதிர்கள் மீது நம் அனைவருக்கும் பெரும் விருப்பம் இருக்கும். புதிர்களை அறிய நம் மனம் ஆவலோடு கூடிய அறிவாற்றலை செலவிடும். வரலாற்று ஆய்வில் இருக்கும் சுவாரஸ்யமே நிகழ்வை நாம் ஊகிப்பதில் அடையும் குதூகலமே. அந்த ஊகங்கள் பின்னாளில் பிழையாக திரும்புவதும், பொருள் மயங்கி காட்சி தருவதும் நமக்கே சுவாரஸ்யமாக இருக்கும் . தமிழ் வரலாற்றாய்வில் அப்படி நடந்துள்ள சில சுவாரஸ்யமான புதிர்களையும், புதிர் விடுவிப்பு தவறாக மாறி தற்போது பொருள் விளங்கி வருவதுமான சில நிகழ்வுகளை பார்க்கலாம். பண்பாட்டு புதிர்கள், கலாச்சார புதிர்கள் போலவே சுவாரஸ்யமானவை மொழி புதிர்கள், கல்வெ ட்டு புதிர்கள். அதோடு ambiguity உள்ள வரலாற்று நிகழ்வுகளை ஊகங்கள் மூலம் கருது கோளாக வைக்கப்படும் நிகழ்வு என்று 3 பகுதிகளாக பார்ப்போம்.     1. மொழிப்புதிர் மிக மெல்லிய கோடு தான் வரலாற்று செய்தியை whit, pun, ஆக ஆகாமல் word play ஆக நமக்கு தெரிய வைக்கிறது.     மேலே உள்ளது தமிழின் தொன்மையான மாங்குளம் கல்வெட்டு “ கணி நந்தஸிரிய்குவனுக்கு வெள்ளறை நிகமத்து காவிதியான கழிதிக அந்தையின் மகன் அஸிதன் என்பவன் உறைவிடம் அமைத்து கொடுத்தா...