ஆனந்த் குமார் கவிதைகள் - நிக்கிதா
மலைமேல் பறக்கும் வீடு அம்மாவின் தலைவலி மருந்தை இந்த மதியத்தில் யாரோ திறந்துவிட்டார்கள் வெக்கையின் காதில் கேட்கிறது யூக்காலிப்டஸ் மந்திரம் வியர்த்துக்கிடக்கும் முதுகில் குளிரேற்றுகிறது வெறுந்தரை ஒரு சிறிய காற்றுக்கு மலைமேலென உயர்ந்துவிட்டது என் வீடு ………………….. ராணி நான் ஒரு எளிய உயிர் ஒரு அடிதான் முன்னால் வைப்பேன் ஒரு யானை எதிரில் வந்தாலும்கூட பின்னால் ஓடமுடியாது என்னால் ஒரு அடி முன்னால் வைக்க என்னைப்போல் ஒரு எளியவனை நான் கொள்ள வேண்டும் அப்படியும் ஒரு அடி முன்னே வைப்பேன் உனக்கோ நீ திரும்பும் திசையே உனது வழி அதில் யாரும் நிற்பதும் கூட இல்லை உனது திட்டங்களோ எனது ' ஒன்றிக்கொன்று ' புத்திக்கு புரிவதேயில்லை இருந்தும் உன்னை நோக்கி ஒரு அடி முன்னே வைப்பேன் எங்கிருந்தோ ' ட ' வெனப்பாயும் உனது குதிரையின் குழம்படியில் ஒருவன் சதைந்து போகிறான் அதன் அ...